கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

News image
floods, landslides in Indonesia
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

UNI

இந்தோனேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தெற்கு சுலாவெசி மாகாணம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது. 

வெள்ளத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 16 பேருக்கு மேல் காணாமல் போனமாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்துள்ளார். 

மழை, வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மணலில் புதைந்துள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் 359-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

மலைப் பிரதேசங்கள் மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளுக்கு அருகே லட்சக்கணக்கானவா் வசிக்கும் இந்தோனேசியாவில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.